நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் சரிவு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல பிரதேசங்களுக்கு கடும் மழை பெய்து வருகிறது.
தலவாக்கலை பிரதேசத்திற்கு நேற்று (05) திகதி பெய்த மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்ந்து தன்னியக்க இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் சென் கிளையார் நீர் வீழ்ச்சியினை நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளது.
எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே வேளை காசல்ரி, மவுசாகளை, கெனியோன், லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டடிய உள்ளிட்ட நீர்த்தேக்களின் நீர் மட்டமும் உயர்வடைந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் எவ்வேளையிலும் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்களுக்கு கீழ் வாழும் மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் - நுவரெலியா மற்றும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளன.
இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.