இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்!

0


 பாரிய பண மோசடி செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆண் மற்றும் பெண் ஒருவரது புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.


அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் கணேசன் (வயது 31), ரீவல் நிரோஷனி ராஜரத்தினம் (வயது 36) என்ற சந்தேக நபர்களே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள், கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான கட்டடம் மற்றும் தோட்டம் என்பவற்றை புனரமைப்புச் செய்து தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து 9,943,108.03 ரூபாயை குறித்த சந்தேகநபர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும், பெற்றுக் கொண்ட தொகைக்கு, நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் சந்தேக நபர்கள் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.

அதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி 0718137373 அல்லது 0112852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top