ஸெய்ன்ஸித்தீக்
2023 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கமு/சது/ றோயல் கனிஷ்ட கல்லூரியில் 19 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்கள். இது போன்று பெறுப்பேற்று அடிப்படையில் கடந்த வருடங்களிலும் இறக்காமம் கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது.
கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம்.பஜீர் அவர்கள் ஆசிரியர்களுக்குப் பின்னால் நிழல் போல் இருந்து செயற்பட்டதுடன் ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் வெளிப்பாடாகவும் பெற்றோர்களின் பகிரத பிரயத்தனத்தின் விளைவே இவ்வெற்றிக்கான காரணமாகவுள்ளது.