(சர்ஜுன் லாபீர்)
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்
கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதற் கட்ட செயலமர்வு இன்று(01)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.
நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி, பாராளுமன்ற நடைமுறைகள், பாராளுமன்ற சட்டவாக்கம், தலைமைத்துவம் தொடர்பில் கல்முனை கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 1200 மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதல் கட்ட செயலமர்வு இதுவாகும்.
கல்முனை வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்(நிர்வாகம்) எம்.எச்.எம் ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரனியுமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இச் செயலமர்வில் பிரதம சொற்பொழிவாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியும்,இலங்கையின் முதலாவது முஸ்லிம் அரசியல்துறைப் பேராசிரியரியருமான எம்.எம் பாஸீல் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாராளுமன்ற கட்டமைப்பு ,நடைமுறை, பாரம்பரியம், ஜனநாயகம் சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜே.கே.எம் அர்ஷாத் காரியப்பர்,
கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம் சபீஸ் ,அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளரும்,கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான
யூ.எல் நூருல் ஹுதா உமர் மற்றும் கல்முனை வலய பிரதி,உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக் கல்வி பணிப்பாளர்கள்,வலயக் கணக்காளர்,பாடசாலைகளின் பொறுப்பு அதிபர்கள்,மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா அமைப்பின் அனுசரனையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.