கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதி உதவித் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட 52 ஏக்கர் 3ம் போகத்திற்கான பாசிப்பயறு அறுவடை நிகழ்வு 03.10.2023 செவ்வாய்க்கிழமை, அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. டீ. எம்.எஸ்.பி. திசாநாயக்க தலைமையில் இறக்காமம் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் விவசாயப் போதனாசிரியர் திரு. எஸ்.ஏ.எல். பஹ்மி அஹமட் அவர்களின் பயிர்ச் செய்கை வழிகாட்டலில் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்விலே உதவி விவசாயப் பணிப்பாளர் சம்மாந்துறை வலயம் திரு. ஏ.எல்.எம். சல்மான், எஸ்.எல்.எம் றசீம் விவசாயப் போதனாசிரியர், எம்.கோகுல்றாஜ் பாட விதான உத்தியோகத்தர், என்.எம்.ஆர்.றசூல் பாடவிதான உத்தியோகத்தர், பீ. குணநீதராசா விவசாயப் போதனாசிரியர், கே.எல்.டீ.ஆர். செனிவிரத்த பாடவிதான உத்தியோகத்தர் ஆகியோர் விவசாயத் திணைக்களம் சார்பாக பங்கு கொண்டனர்.
இந்த பாசிப்பயறுச் செய்கை ஆனது 2023 கால போகத்தில் நெற் செய்கை அறுவடை இடம்பெற்ற நெல் வயல்களில் 3ம் போகமாக பாசிப்பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டது, இந்த பயிர்ச் செய்கையின் நோக்கங்களாக பின்வருவன கருத்தில் கொள்ளப்பட்டது.
● அரசாங்கத்தின் 13 பயிர்கள் உற்பத்தி மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாசிப் பயறு உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
● அரசாங்கம் பாசிப்பயறு இறக்குமதிக்கு விதித்திருக்கும் கட்டுப்பாட்டிற்கு உள்ள நாட்டு உற்பத்தியை அதிகரித்தல்.
● நாட்டின் புரதத் தேவையை ஈடு செய்தல்.
● மண்ணின் வளத்தினை மீள் இளமைப்படுத்தல்.
● அதே வயலுக்கு அடுத்த போகத்திற்கு தேவையான யூரியாவின் அளவை 10 கி.கி மினால் குறைத்தல்.
● இடைக்கால வருமானத்தை பெற்றுக் கொடுத்தல்.
இன்னும் பிரதானமாக இத்திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்பட்ட செய்கையாளருக்கான வருமான ஈட்டமானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இங்கே முக்கிய அம்சமாகும், அதாவது ஒரு ஹெக்டயரில் 0.3 மெ.தொன் அறுவடை பெறப்பட்டதுடன், தற்போதைய சந்தை விலையில் ஏக்கறுக்கு 1.5 லட்சம் வெறுமனே 65 நாட்களில் பெற்றுக் கொண்டுள்ளமை இந்த பொருளாதார நெருக்கடியான காலத்தில் நிம்மதியளிக்கிறது.
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட விதை பாசிப் பயறானது எதிர்வரும் போகத்திற்கான விதையாகவும் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அத்தனை நோக்கங்கழும் பெருமளவு நிறைவடைந்துள்ளது இங்கே நிம்மதிப் பெருமூச்சை அளிக்கிறது.
ஆகவே எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான திட்டங்களின் மூலம் பல நூறு ஏக்கர் பாசிப்பயறு செய்கையினை கரையோரப் பிரதேசங்களில் வியாபிக்க செய்யவும் இங்கே உறுதி பூணப்பட்டது.
அத்தோடு 50% மானிய நிகழ்ச்சி திட்டங்கள் இவ்வாறான விவசாய அபிவிருத்திக்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருக்கிறது என்பது இங்கே கேடிட்டுக் காட்டப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும், இதற்காக கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்திற்கு விஷேடமான நன்றிகள் என்றென்றும் உரித்தாகும். தெடரட்டும் நம் நற் சேவைகள், வளம் பெறட்டும் எம் வள்ளல்களான விவசாயிகள்.
S.A.L.Fahmy Ahamed AI SLTS-1,
Departure of Agriculture ( Ep),
AEC/ Irakkamam.