ஸெய்ன்ஸித்தீக்
கடந்த 2023.09.27ம் திகதி திருகோணமலை st. ஜோசப் கல்லூரியில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் தேர்வில் இறக்காமம் அல்/அஷ்ரப் தேசிய பாடசாலை தரம் 07ல் கல்வி பயிலும் மாணவன் சமீர் அப்ரம் தகி தேர்ச்சி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ,இதே வருடம் கணித வினாடி வினா மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொண்டதோடு, சிங்கள வாசிப்பு மாகாண மட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ளமையும் குறிப்பிடததக்கது.
கடந்த 2021ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரீட்சையில் 174 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதல் நிலை சித்தியை பெற்றதோடு இறக்காமம் அல்ஹம்தியா குர்ஆன் மனனக் கல்லூரியில் குர்ஆன் மனனம் செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமை புரியும் கே.எல். சமீர் ( B.Com ) மற்றும் எம் வை. பாயிஷா என்பவர்களின் செல்வ புதல்வன் ஆவார்.