அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார்.
குடியரசு கட்சி உறுப்பினர்களின் 08 வாக்குகளும், ஜனநாயக கட்சியின் 208 உறுப்பினர்களும் இதற்காக வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 216க்கு 210 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளதால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு நீக்கப்படுவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் மெக்கார்த்தி, மீண்டும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று சபையில் தெரிவித்துள்ளார்