S.M.Z.சித்தீக்
கொழும்பு கொள்ளுப்பட்டி டூப்ளிகேஷன் வீதிக்கு அருகே காணப்பட்ட ஆலமரம் எதிர்பாராத விதமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியில் வீழ்ந்துள்ளது.
இதனால் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள். ஆலமரத்தின் விழுதுகள் வெட்டப்பட்டுள்ளமையே மரம் சாய்ந்ததற்கான முக்கிய காரணம் என நம்பப்டுகின்றது.
பொதுவாக ஆலமரம் பல நூறு வருடங்கள் இருப்பதாயின் அதன் விழுதுகளை அகற்றக்கூடாது. அதன் விழுதுகள் தான் அதன் வேராக மாறுகின்றது. அதனால் தான் இலக்கியத்திலே "ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளுடன்" என்று உவமையாகக் கூறுகின்றார்கள்.
எனவே ஆலமரத்தை நடுவதாயின் அதற்கு பொருத்தமான இடத்தில் அதன் விழுதுகள் நிலத்தை வந்தடைவதற்கு வசதியாக நட வேண்டும். வீதி ஓரமாக விழுதுகள் வெட்டப்பட்ட நிலையில் ஆல மரங்கள் காணப்படுவது ஆபத்துக்குள்ளான ஒரு விடயம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.