றியாஸ் ஆதம்
பிராந்திய செய்தியாளர்
நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய அறிவும் ஆரோக்கியமும் நூல் அவரது சொந்த ஊரான கண்டி எனசெல்கொல்ல பிரதேசத்தில் இன்று (31) வெளியிடப்பட்டது.
எனசெல்கொல்ல முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதன் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், தொழிலதிபர் கலாநிதி முனீர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வினை டொக்டர் ஆர்.எப்.றிஸ்மியாவின் பள்ளித் தோழமைகள் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.