ஃபலஸ்தீன் நெருக்கடி குறித்து எழுதுகின்றவர்களுக்கு

Dsa
0

 


கலாநிதி. றவூப் ஸெய்ன்


இன்றைய நாட்களில் பலஸ்தீன் நெருக்கடி குறித்து பலரும் தமக்குத் தெரிந்த வற்றையும் தமக்கு கிடைக்கப்பெற்ற வற்றையும் எழுதியும் பகிர்ந்தும் வருகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை வரலாற்றுததர்க்கங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை. நீதியான நேர்மையான நடுநிலைத்தன்மையான அணுமுறையிலிருந்து விலகிச் செல்பவை. 


பலஸ்தீனின் மிகப் பண்டைய வரலாறு அதற்கும் இன்றைய அரேபியர்கள் மற்றும் யுதர்களுக்கும் இடையிலான வரலாற்று உறவு என்ன?


ஸியோனிஸம் யூதம் யூதவாதம் போன்றவற்றுக்கிடையிலான நுண்ணிய வேறுபாடுகள் என்ன?


வரலாற்றில் யூதர்கள் வாதிப்பது போன்று ஹொலகோஸ்ட் ( holocaust) என்ற ஒன்று நடந்ததா? அதன் அனுதாப அரசியலின் பின்புலம் என்ன?


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அறேபியர்களுடன் வரலாற்று ரீதியாகவோ பண்பாட்டு ரீதியாகவோ சமய அல்லது இறையியல் ரீதியாகவோ மொழிரீதியாகவோ சம்பந்தப்படாத ஒரு ஸியோனிஸ பிண்டப்பிரமாண்டத்தை (Zionist entity) இந்தப்புவிப்பரப்பின் மையத்தில் நிலை நிறுத்தி வைத்திருப்பதன் நோக்கம் என்ன?


300 மில்லியன் மக்களைக் கொண்ட உலகப்பேரரசு அமெரிக்கா வெறும் 4 மில்லியன் யூதர்களைக்கொண்ட இஸ்ரேலுக்கு வருடாந்தம் 3 பில்லியனை இராணுவ உதவியாக வழங்கி வருவதன் மற்றும் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இதுவரை அதன் போர்க்குற்றங்கள் நிறுவப்பட்டும் தனது ஒற்றை ரத்ததிகாரத்தால் வொஷிங்டன் இஸ்ரேலைக்காப்பாற்றி வருவதற்கும் பின்னாலுள்ள உண்மைகள் என்ன?


இஸ்ரேல் 400 மில்லியன் அறபு முஸ்லிம்களின் வாசற்படியில் நான்கு மில்லியன் யூதர்களோடு வீழ்த்த முடியாத ஒரு வன்கொடுமை பிண்டமாக எழுந்து நிற்கையில் தனது சொந்த அறேபியர்களான பலஸ்தீனர்களை கண் முன்னால் குரூரமாக்கொன்று குவிக்கையில் சவுதி எகிப்து மற்றும் பிற அறபு நாடுகள் இஸ்ரேலின் பக்கம் நிற்பதன் பின்புலம் என்ன? வேறுவகையில் கிறிஸ்தவ ஸியோனிஸ்டுகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத அறபு ஸியோனிஸ்டுகள் அங்கே ஆணவம் கொண்ட இஸ்ரேலை ஆதரித்து நிற்பதேன்?


இந்தக்கேள்விகளுக்கு வரலாற்று ரீதியிலும் சமகால புவி அரசியல்(Geo -politics) ரீதியாகவும் விடை காணாமல் ஃபலஸ்தீன் பிரச்சினை குறித்து எழுதாமலும் விவாதிக்காமலும் இருப்பது உசிதம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top