வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பிக்கு ஒருவர் உயிரிழப்பு

Dsa
0

 


குருணாகல் - பொத்துஹெர, லிஹினிகிரிய, பொத்குல் விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பிக்குவுக்கு சொந்தமான பொத்துஹெர -  பரபாவில பிரதேசத்தில் உள்ள தனியார் வீடொன்றில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிக்கு இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் இருந்து ஓய்வுபெற்று கடந்த மார்ச் மாதம் துறவு வாழ்க்கைக்கு பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உயிரிழந்த தெரணம திருமணமானவர் எனவும், அவரது மனைவி சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மரணமான அன்று இரவு சிலர் தேரரைச் சந்திக்க வந்து வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பதிகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக பொலிஸார் சுட்டிக்கபட்டியுள்ளனர்.


இந்நிலையில் தெரணமவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலையில் தெரணமுடன் இருந்த நபரே ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top