கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள பிராந்திய மருந்து விநியோகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் மருந்தாளராகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மருந்தாளர் ஐ.எல்.அப்துல் றகுமான் தனது 36 வருட கால அரச சேவை சுகாதாரப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மருந்தாளர் றகுமானுடைய மகத்தான பணியை பாராட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா திங்கட்கிழமை (25) பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர்
Dr.எம்.பீ.அப்துல் வாஜித் வரவேற்பு மற்றும் அறிமுக உரையினை நிகழ்த்தியதுடன் மருந்தாளர் றகுமானின் சேவையினை பாராட்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.எம்.சீ.எம்.மாஹிர், உள்ளிட்ட பலரும் உரையாற்றியதுடன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் மருந்தாளர் றகுமானுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இன்று நடைபெற்ற நிகழ்வில் விசேடமாக பிரதேச வைத்திய அதிகாரிகள் சிலரும் பிரிவுகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது