*இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு (பஸ் பாஸ்) நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த கிழக்கு ஆளுநர் பணிப்பு!*




அபு அலா -


கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாணச் சீட்டு (வஸ் பாஸ்) நடைமுறையை மீண்டும் அமுல்படுத்தி அதை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 


கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும், ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்றது.



இச்சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு (பஸ் பாஸ்) நடைமுறை கோரிக்கையை உடனடியாக அமுல்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளரை தொடர்புகொண்டு இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு (பஸ் பாஸ்) நடைமுறையை உடனடியாக அமுல்படுத்தி அதை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார். 


ஊடகவியலாளர்கள் எவ்வித இலாபங்களுமின்றி சமூக நோக்கை முன்நிறுத்தி தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றவர்கள். அவர்கள் தங்களின் நேரம், காலம், பணம் போன்றவற்றுக்கு மேலாக தனது உயிரையும் தியாகம் செய்து ஊடகப் பணியை தங்கு தடையின்றி மேற்கொண்டு வருபவர்களாக இருக்கின்றனர். அவர்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுப்பதில் நான் என்றும் முன்னிற்பேன் என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்தார். 


கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்டு வந்த இலவச போக்குவரத்து பிரயாணச் சீட்டு (பஸ் பாஸ்) நடைமுறையை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை வழங்காமல் இடை நிறுத்தியிருந்தமையும், அதை மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை புதிய ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section