உதயமானது பொதுமக்கள் தொடர்பாடல் அலகு



கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் கோரிக்கை மற்றும் பொதுமக்களுக்கு வினைதிறன்மிக்க சேவைகளை வழங்கும் கருத்தியலுக்கமைவாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாகவும்  இன்று 2023.07.20 ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் அவர்களினால் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது  .



பொதுமக்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அர்ப்பணிப்புமிக்க சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாகவும் வேலைகளில் ஏற்படும் தாமதம் மற்றும் குறைபாடுகளை இனங்கண்டு உடனடியாக தீர்ப்பதற்கு ஏதுவாகவும் இவ்வலகு திறந்து வைக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் வேலை நாட்களில் உரிய உத்தியோகத்தர்களை பொதுமக்களோடு ஒருங்கிணைக்கவும் பயண விரயங்களைக் குறைத்து செயற்றிறன்மிக்க சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாகவும் இப்பொதுமக்கள் தொடர்பாடல் அலகு (Front Office Desk) திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு அதனை முகாமைத்துவம் செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இவ்வலகில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் குறைதீர்க்கும் முறைமையை (GRM) கையாளுவதோடு தகவல் அறியும் சட்டம் தொடர்பான விடயங்களை பிரதி பணிப்பாளரோடு ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்வார் மேலும் ஒவ்வொரு வேலைகளுக்குமான பரிசோதனைப் பட்டியலை வழங்கி (checking list) குறித்த விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தரை அழைப்பித்து இருதரப்பு ஊடாட்டங்களை செய்வதோடு விடயத்தின் நியமங்களை அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்றும் நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர் தெரிவித்தார்


ஊடகப்பிரிவு

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section