கவிஞர் அஸ்மின் எழுதிய "ஐயோ சாமி" பாடலுக்கு மக்கள் அபிமான விருது.

 


யார் இந்த அஸ்மின்?


இலங்கை தமிழ் கவிஞர் அஸ்மின்.  இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடித்த "நான்" படத்தில் "தப்பெல்லாம் தப்பேயில்லை." என்ற பாடல் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுக மானார். 



இந்த பாடல் எழுத அஸ்மின்  தேர்வு செய்யப்பட்டதே சுவையான அனுபவம். குறிப்பிட்ட பாடலுக்கு டியூன் மட்டும்  அளிக்கப்பட்டு போட்டி அறிவிக்கப்பட்டது. அந்த டியூனுக்கு யார் பொருத்தமான பாடல் எழுதுகிறாரோ அவரது பாடல்தான் தேர்வு செய்யப்பட்டு  படத்தில் இடம் பெறும் என்று விஜய் ஆண்டனி அறிவித்தார். இதில் மொத்தம் 20 ஆயிரம் பாடலாசிரியர்கள் பங்கேற்று பாடல்களை அனுப்பினர் அப்போட்டியில் முதலிடத்தைப்பெற்று வெற்றியீட்டியவர்தான் கவிஞர் அஸ்மின்.



"அமரகாவியம்" படத்தில் "தாகம் தீர கானல் நீரை", "சும்மாவே ஆடுவோம்" படத்தில் "முத்து முத்து கருவாயா.." "எந்த நேரத்திலும்" படத்தின் அனைத்து பாடல்களும், "இது கதையல்ல நிஜம்" படத்தில் "சண்டாளனே ஏதோ ஆகுறனே"  என 25 திரைப்படங்களுக்கு பாடல்கள் அஸ்மின் எழுதியுள்ளார்.கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஜமீலா" நெடுந்தொடரின் பாடல்களையும் இவரே எழுதியுள்ளார்.



அஜீத் நடித்த விஸ்வாசம் படத் திற்காக "தூக்கு துரை பேரை கேட்டா வாயப் பொத்தும் நெருப்பு" என்ற புரமோஷன் பாடல், அதேபோல் அண்ணாத்த படத்துக்கு "வர்ராரு வர்ராரு அண்ணாத்த நீ இனிமேலும் முடியாது ஏமாத்த" என்ற புரமோஷன் பாடலும் எழுதியுள்ளார்.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின் போது "வானே இடிந்ததம்மா" என்ற பாடல் வைரலானது அப்பாடலை எழுதியவரும் அஸ்மின்தான்.  இந்த பாடல் ஜெயலலிதா சமாதியில் 2 மாதம் தொடர்ந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பப்பட்டது. வர்ஷன் இசை அமைத்து இப்பாடலை பாடியிருந்தார். இப்பாடலுக்காக சசிகலா நடராஜன் போயஸ்கார்ட்டனுக்கு கவிஞர் அஸ்மினை நேரில் அழைத்துச் பாராட்டி கெளரவித்தார்.



'"கோச்சடையான்'' திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாருக்கு  தான்   நாயகன் அறிமுகப்பாடலை எழுதினால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையில்  ஒரு சில வரிகளை முகநூலில் எழுதி பகிர்ந்தார்.


"எரியும் மலையின் வீச்சுடையான்-அவன்

எதிரிவணங்கும் பேச்சுடையான்

எழுவான் எழுவான் கோச்சடையான் வருவான்...!"இப்படி ஆரம்பிக்கும் வரிகள் திரைப்படமொன்றில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பினை அஸ்மினுக்கு பெற்றுக்கொடுத்தது.


பாடல் வரிகளை முழுவதும் படித்துவிட்டு தயாரிப்பாளரும் திரைப்பட இயக்குனருமான ரவிச்சந்திரன் ராஜ் தன்னுடைய திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு வழங்கினார்.அதன் பின்னர் மிதுன் ஈஸ்வர் இசையில் ITC Grand Chola Hotel இல் அமர்ந்து பாடல் எழுதிக்கொடுத்தார் அஸ்மின்.



இந்த திரைப்படத்தில்தான்  இவர்  முதன் முதலாக

பாடல் எழுதுவதற்கான  அதிகூடிய ஊதியம் பெற்றுக்கொண்டதாக கூறுகின்றார். "விடை தேடும் வினாக்கள்","விடியலின் ராகங்கள்"," பாம்புகள் குளிக்கும் நதி"  என மூன்று கவிதை நூல்கள், முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றிருக்கும் அஸ்மின் இலங்கை மண்ணின் இலக்கிய சாதனையாளர்.  தன் முயற்சியால் மண்ணைக்கூட பொன்னாய் மாற்றும் திறமை படைத்த அஸ்மினை ரசிகர்கள் மினி வைரமுத்துவாகவே  கொண்டாடுகின்றார்கள்.


இதுவரை   200 அதிகமான பாடல்கள் எழுதியிருக்கும் அஸ்மினின் பூர்வீகம் ராமநாதபுர மாவட்டம் தேவிபட்டிணம் ஆகும். 

இலங்கையில்  ஊடகத் துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக 15 வருடம் பணியாற்றியிருக்கிறார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆவணவாக்கம் ,சந்தைப்படுத்தல் துறையில் சீனா அரசின் புலமை பரிசில் பெற்று பீஜிங்கில் பயிற்சி பெற்றிருக்கிறார்.


"ஐயோசாமி நீ எனக்கு வேணாம்" பாடல் பற்றி 


காதல் தோல்வி பற்றி இதுவரை பெரும்பாலும் ஆண்கள் பாடுவது போல் தான் பாடல்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. "ஐயோ சாமி" பாடல் பெண்ணின்  காதல் தோல்வியை  பற்றி பாடும் படியாக உணர்வு பூர்வமாக அமைக் கப்பட்டதாகும். இப்பாடல் சர்வதேச பெண்களின் தேசிய கீதமாகவே ஒலிக்கிறது.இப்பாடலை இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ரீல்ஸ்,டிக்டொக் செய்துள்ளனர்.


இதுவரை இலங்கையில் எழுதப்பட்ட தமிழ் பாடல்களில் இந்த பாடல்தான் யூடியுப் தளத்தில்   20 மில்லியன் வியூஸ்களை பெற்ற முதல்பாடலாகும். முகநூல், இன்ஸ்டாகிராம் ,டிக்டொக் உள்ளிட்ட மற்ற சோசியல் மீடியாக்கள் சேர்த்து மொத்தமாக  60 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை  இப்பாடல் பெற்றுள்ளது. இப்பாடலைக்கேட்ட தேனிசை தென்றல் தேவா,இயக்குனர் அமீர் உட்பட திரை ஜாம்பவான்கள் பலர் அஸ்மினை பாராட்டியுள்ளனர்.

 

இலங்கையில் ஆஸ்கர் விருது போல் மதிக்கப் படும் மக்கள் அபிமான விருது ஆண்டின் மிகச் சிறந்த பாடல் (SONG OF THE YEAR)என்று 

தேர்வு செய்யப்பட்டு ஐயோ சாமி பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இலங்கையின் இசை வரலாற்றில் SLIM KANTAR PEOPLE'S AWARDS -2023 நிகழ்வில் வருடத்தின் சிறந்த பாடல் 

விருதினை பெற்ற முதல் தமிழ்பாடல் இதுவாகும்.


இதற்கு பிறகு மீண்டும் ஒரு இலங்கை தமிழ் பாடலுக்கு இவ்விருது கிடைக்குமா என்று கேட்டால் நிச்சயம் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறப்படுகிறது.


இலங்கையில் வெளிவருகின்ற தமிழ், சிங்களம்,ஆங்கில.மொழி பாடல்களில் மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறும் ஒரே ஒரு பாடலுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.


இலங்கை அரசினால் வழங்கப்படும் தேசிய விருதினைவிட இதன் தேர்வு நிலை கடினமானது. எந்தவித தனிப்பட்ட செல்வாக்கையோ, அதிகாரத்தையோ பயன்படுத்தி இவ்விருதினை எவராலும் பெறமுடியாது.


Sri Lanka Institute of Marketing (SLIM) with Kantar Group ,UK. ஆகியன இந்த விருதினை வழங்குகின்றன.


 அமெரிக்காவினை தலைமையகமாக கொண்ட Nielsen Holdings நிறுவனம் இலங்கை  மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி இதற்கான ஆய்வறிக்கையினை பரிசீலித்து, துறை சார் வெற்றியாளர்களை வருடா வருடம் பரிந்துரை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கவிஞர் அஸ்மின் எழுதிய இப்பாட லுக்கு சனுக்க இசையமைக்க அமைத்திருக்கிறார் . 

பாடகி விண்டிகுணதிலக்க  பாடியுள்ளார். இப்பாடலை தன்னகப்படுத்திக்கொள்ள. பிரபல இசை லேபில்கள் போட்டிபோட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


-வேலு

பி ஆர் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section