இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்திய மகளிர் தினம்

 



நூருல் ஹுதா உமர்


இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு  நிறுவனமான "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலாவின் ஒருங்கமைப்பில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.எஸ். அன்ஸார் மௌலானா  தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் இப்தார் வைபகமும் மருதமுனை பெண்கள் நிலையத்தில் இடம்பெற்றது.


மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ. ஜெனிட்டா மகளிர் தின சிறப்புரை நிகழ்த்தினார். அமைப்பின் செயலாளர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யாவினால் மகளிர் தின சிறப்புக்கள் பற்றி உரையொன்று நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்வில் காதி நீதவான் சிரேஷ்டசட்டத்தரணி எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா, சமய தலைவர்கள், சமூக அமைப்புக்களில் உள்ள பெண் தலைவிகள், அமைப்பின் உப தலைவரும் சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளருமான எஸ்.எல்.ஏ.அஸீஸ், வெளியீடுகளுக்கான செயலாளரும், ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர் ஆர். அனுஸ்கா, ஒருங்கிணைப்பு குழு செயலாளரும், ஆசிரியருமான எம்.எம். விஜிலி மூஸா, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர்கள், இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section